தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் கிராமங்கள் தோறும் பரவியிருக்க நம் இனம் சார்ந்த அனைத்து மக்களின் மக்கள் தொகை கணக்கெடுத்து அவைகளை ஒட்டுமொத்தமாக கணினியில் பதிவேற்றம் செய்து மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய மக்கள் தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்லாமல் திருமணம் ,வேலைவாய்ப்பின்மை போன்ற சிக்கல்களுக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யவும் முனைந்துள்ளது தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம்.
நம் மாணவர்களின் படிப்பு திறனை மேம்படுத்த பயிற்சி மையங்கள் அமைத்து இலவசமாய் அவற்றை செயல் பட செய்தல்.
தமிழகம் முழுவதும் உள்ள நம் இனம் சார்ந்த திறன் பெற்ற டாக்டர்கள்,எஞ்சினியர்கள் போன்ற நபர்களின் விபரங்கள் சேகரிக்க பட்டு நம் மக்கள் அனைவருக்கும் அவை பகிர்ந்து பயன் பெற வழி செய்யப்படும்.