நம் ரெட்டி இன மக்கள் ஆந்திராவில் இருந்தோ அதற்கு மேல் இருந்தோ தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வந்தவர்களாக இருந்தாலும் இங்கு ஜமீன்தார்களாக, மிட்டா, மிராசு தாரர்களாக மட்டுமல்லாமல் எந்த ஒரு ஊரிலும் தாங்களே முன்னின்று ஊரை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்கள் ஆகவும் இருந்து வருகிறார்கள். அனாவசியமாக எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்கள் நம் இன மக்கள். என்றாலும் எந்த பெரிய பிரச்சினைகளையும் சந்தித்து வெற்றி பெறுகிற ஆற்றலும் கொண்டவர்கள்.
இந்த தலைமுறையில் கல்வியிலும் உயர்நிலையில் இருக்கக்கூடிய பெரும்பாலான நம் இன பிள்ளைகள் பலரும் இனத்திற்கு பெருமை சேர்ப்பவர்கள்.
உயர்ந்த பண்பாட்டையும் சிறந்த கலாச்சாரங்களையும் நேர்மைத் தன்மையையும் கொண்ட உயர்வான சமூகம் நம் ரெட்டி சமூகம்.